நாகை மாவட்டம் சிக்கல் பகுதி மடத்தான்தெரு, கீழவெளி பகுதியில் தொம்பை வாய்க்கால் பாலம் வழியாக உள்ளது. இந்த பாலத்தின் வழியாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கல் பகுதிக்கு சென்று வருகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பாலம் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக பாலத்தில் உள்ள சுற்றுசுவர்களின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பாலத்தில் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?