நெய்யூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வடக்கு தெருவில் அம்மாள்குளம் உள்ளது. இந்த குளத்தை அப்பகுதி மக்கள் குளிப்பதற்கும் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். இந்த குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமலும், குளத்தை சுற்றி புதர் மண்டியும் காணப்படுகிறது. ேமலும், படித்துறையும் சேதமடைந்துள்ளது. இதனால், தற்போது குளத்தை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை தூர்வாரி, படித்துறையை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.