தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2022-08-22 12:13 GMT
பெரம்பலூர் மாவட்டம், செங்குணம் கிராமத்தில் கடந்த 1924-ம் ஆண்டு முதல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நடப்பு கல்வியாண்டில் 36 ஆண்கள், 51 பெண்கள் என மொத்தம் 87 மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில்  ஆசிரியர்கள் பற்றாக்குறை  காரணமாக ஏழை-எளிய  மாணவர்களின் எதிர்கால கல்வி பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பள்ளிக்கு புதிய ஆசிரியை ஒருவரை நியமித்துள்ளனர். இதற்கு இப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்