பண்ருட்டி நகராட்சி 33-வது வார்டில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமாக ஸ்ரீ ரங்கநாதர்கோவில் உள்ளது. பழமைவாய்ந்த இந்த திருக்கோவிலுக்கு சொந்தமான தேரடி மண்டபம் சேதமடைந்து மரம், செடிகள் முளைத்து இடியும் நிலையில் உள்ளது. ஆகவே இந்தப் பழமை வாய்ந்த தேரடி மண்டபத்தை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?