அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், த.சோழன்குறிச்சி கிராமத்தில் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே உள்ள பெரிய ஏரியில் பெண்கள் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் பயன்படுத்தி வந்த 4 படித்துறைகள் கடந்த 5 ஆண்டுகளாக பாழடைந்த நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதி பெண்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.