சென்னை எழும்பூர் பெரியமேடு தனியார் மருத்துவமனை இருக்கும் சாலையில் அமைந்துள்ள பாதாள சாக்கடையின் மூடி சரியாக மூடப்படாமல் உள்ளது. அபாயகரமான நிலையில் இருக்கும் பாதாள சாக்கடையால், இரவில் இந்த சாலையில் பயணம் செய்யவே அச்சமாக உள்ளது. எனவே விரைவில் இந்த பாதாள சாக்கடையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.