திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆமூர் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு திருக்கோவிலூர் அணைக்கட்டிலிருந்து டி.புதுப்பாளையம் வழியாக ராகவன் வாய்க்கால் மூலம் தண்ணீர் வரும். இந்த வாய்க்காலை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அதன் வழியாக ஏரிக்கு தண்ணீர் சரியாக வருவதில்லை. இதனால் அப்பகுதியில் விவசாயத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க ஏரி வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.