பயனற்ற பெயர் பலகை

Update: 2022-08-22 10:02 GMT
பயனற்ற பெயர் பலகை
  • whatsapp icon

காங்கயம்- கரூர் சாலை பகுதியில்நகரத்தின் ஆரம்ப பகுதியில் பல நாட்களாக ஊர் பெயர் பலகை பயனற்று கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஊர் பெயர் தெரியாமல் குழப்பம் அடைந்து வருகின்றனர். மேலும் வெளியூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் சாலையின் ஓரம் இருப்பவர்களிடம் ஊரின் பெயரை கேட்டுச் செல்லும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பயனற்று கிடக்கும் ஊர் பெயர் பலகையை சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்