அடிப்படை வசதிகள் தேவை

Update: 2022-08-21 15:53 GMT

சேலம் உயிரியல் பூங்கா ரோடு பிருந்தாவன் கார்டன் என்.எஸ்.கே. பள்ளியின் பின்புறம் தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் அந்த பகுதியில் இரவு நேரத்தில் வெளியே வர குழந்தைகள், பெண்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் 8 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வருகிறது. இதனால் மக்கள் குடிநீரை தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.

-ராஜா, சேலம்.

மேலும் செய்திகள்