மதுரை மாவட்டம் வி.ஓ.சி. முதல் தெரு அருள்நகர் பகுதியில் சமீபகாலமாக நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. சாலையில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். நாய்கடியால் தினமும் சிலர் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே பொதுமக்களுக்கு தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்டட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?