மதுரை நகர் வடக்குதெருவிற்கு உட்பட்ட செல்லூர் கண்மாய்கரையில் புதர்மண்டி சீமைகருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. மது அருந்தும் கூடாரமாக உள்ளது. இதனால் கண்மாய்கரையை ஓட்டி குலமங்கலம் மெயின்பிரதான சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல, வாகனங்களில் பயணிக்க அச்சம் அடைகின்றனர். எனவே இந்த கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.