. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் உழவர் சந்தை உள்ளது. இந்த சந்தை போதிய பராமரிப்பு இல்லாததால் குறைவான விவசாயிகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. மேலும் உழவர் சந்தை வெளியில் வியாபாரம் செய்வதால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உழவர் சந்தையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
பொதுமக்கள், மயிலாடுதுறை.
========================