விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை மாதா கோவில் சந்திப்பு பகுதியில் மண்எண்ணெய் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த சில மாதங்களாக பொதுமக்கள், மண்எண்ணெய் வாங்காத நிலையில், வாங்கி விட்டதாக அவர்களது செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பப்படுகிறது. எனவே இங்கு வரும் மண்எண்ணெயை வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.