நாய்கள் தொல்லை

Update: 2022-08-21 13:11 GMT


திருவாரூர் பகுதியில் நாளுக்கு நாள் தெரு நாய்கள் பெருகி வருகிறது. இந்த நாய்களால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் நாய்கள் கடித்து பலர் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெறும் சூழ்நிலையும் நிலவுகிறது .மேலும் சாலையில் நாய்கள் திரிவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நாய்களை ஒழிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் திருவாரூர்

மேலும் செய்திகள்