ரிஷிவந்தியம் அருகே மேல்புதூர் வடக்கு தெருவில் கைப்பம்பை அகற்றாமல் சிமெண்டு சாலை போடப்பட்டது. இதனால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் உருவானது. இதுகுறித்த செய்தி படத்துடன் தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அந்த கைப்பம்பை அதிகாரிகள் அகற்றினர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் தினத்தந்திக்கு நன்றி தெரிவித்தனர்.