ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

Update: 2022-08-21 12:15 GMT

ரிசிவந்தியம் அருகே கடுவனூரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியை அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். இதனால் மழைக்காலங்களில் ஏரியில் அதிக அளவு தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்