குளத்தை தூர்வார வேண்டும்

Update: 2022-08-21 11:23 GMT

திருவிதாங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட அமராவதியில் குளம் உள்ளது. இந்த குளத்தை அப்பகுதி மக்கள் குளிப்பதற்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தி வந்தனர். மேலும், குளத்தில் இருந்து உபரிநீர் வாய்க்கால் வழியாக விவசாய நிலங்களுக்கு செல்கிறது. தற்போது, குளத்தில் இறைச்சி கழிவுகள், குப்பைகளை சிலர் கொட்டியும், உபரிநீர் கால்வாயில் வீடுகளில் இருந்து வெளியேரும் கழிவுநீரை விடுவதால் தண்ணீர் மாசடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுத்து குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜி.கிருஷ்ணன், கொல்லாய்.

மேலும் செய்திகள்