மின் விளக்கு பொருத்த வேண்டும்

Update: 2022-08-21 10:55 GMT

திருப்பூர் மாநகராட்சி 47-வது வார்டு காட்டுப்பாளையம் பகுதி பூஞ்சோலை நகர் 1,2,3 ஆகிய தெருக்களில் உள்ள மின் கம்பத்தில் மின் விளக்கு இல்லை. இதனால் இரவு நேரங்களில் அந்தத் தெருவில் வசிக்கும் பொது மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் தெரு முகப்பில் இருட்டான பகுதியில் மது பிரியர்கள் மது அருந்துகிறார்கள். எனவே தெருவில் வாழும் மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக மின்விளக்குகளை பொருத்தப்பட வேண்டும் என்று மக்களின் கோரிக்கையாகும். ,


மேலும் செய்திகள்