சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேரூராட்சிக்குட்பட்ட பஸ் நிலையத்தில் ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியாக கழிவறை உள்ளது. தற்போது இந்த கழிவறை கட்டிடம் மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு வருகின்ற வெளியூர் பயணிகள் குறிப்பாக பெண்கள் கழிவறைக்கு செல்முடியாமல் சிரமப்படுகின்றனர்.எனவே கழிப்பறை கட்டிடம் மராமத்து பணிகள் நடைபெறும் வேளையில் பெண்களுக்கான தற்காலிக கழிப்பறை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.