உடன்குடி பஸ்நிலையத்தில் மணிக்கூண்டு உள்ளது. ஆனால் அதில் உள்ள கெடிகாரம் பழுதடைந்து பல மாதங்களாக காட்சி பொருளாகவே உள்ளது. பாமர மக்கள் அவசரத்துக்கு மணி பார்ப்பதற்கு மணிக்கூட்டை எட்டிப்பார்த்து ஏமாற்றம் அடைகின்றனர். திங்கள்கிழமை தோறும் வாரச்சந்தைக்கு வரும் கிராம மக்கள் அதிக அளவில் கூடும்போது பஸ்வரும் நேரத்தை தெரிந்து கொள்ள முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே கெடிகாரத்தை சரிசெய்து மணிக்கூண்டு நேரம் காட்டுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?