தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டிலிருந்து திருவோணம் செல்லும் சாலையில் மேலத்தோட்டத்தில் அரசு கட்டிடம் பயன்பாடு இல்லாமல் உள்ளது. மேலும் இந்தகட்டிடத்தில் இருந்து மரக்கிளைகள் சாலையின் நடுபகுதிவரை செல்கிறது. இதனால் வாகனங்கள் செல்வதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், ஒரத்தநாடு