அரியலூர் மாவட்டம், புதுப்பாளையம் ஊராட்சி நெருஞ்சிக்கோரை கிராமத்தில் உள்ள கிழக்கு மற்றும் வடக்கு தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வடிகால் வசதி இல்லாததால் மழை காலங்களில் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.