திருவெண்ணைநல்லூர் ஏரளூர் கிராமத்தில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் நீர்ப்பாசன வாய்க்கால் உள்ளது. இந்த பகுதியில் யாரேனும் இறந்தால் அவர்களின் உடலை இந்த வாய்க்கால் வழியாக எடுத்துச் சென்று வருகின்றனர். மழைக்காலங்களில் வாய்க்காலில் நீர்வரத்து செல்லும்போது இறந்தவர்களின் உடலை எடுத்து செல்லும்போது அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அங்கு பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.