தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டிலிருந்து திருவோணம் செல்லும் சாலையில் உள்ள மண்டலக்கோட்டை கேணிபாலம் அருகே மின்சார கம்பிகளில் மரக்கிளைகள் படர்ந்து உள்ளது. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் ,ஒரத்தநாடு