மயிலாடுதுறை அருக தரங்கம்பாடியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் அருகில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை கடித்து விடுகின்றன. மேலும் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை தெருநாய்கள் விரட்டி சென்று கடிக்கின்றன. நாய்கள் சாலையில் சுற்றித்திரிவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தரங்கம்பாடி