விக்கிரவாண்டி தீயணைப்பு நிலையம் பேரூராட்சிக்கு சொந்தமான சமுதாய கூடத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. இங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் மற்றும் வீரர்கள் சிரமப்படுகின்றனர். எனவே தீயணைப்பு நிலையத்துக்கு தனி இடம் ஒதுக்கீடு செய்து அங்கு அடிப்படை வசதிகளுடன் தீயணைப்பு நிலையம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?