விழுப்புரம் சாலாமேடு புகாரி நகர் பகுதியில் உள்ள தார் சாலை மிகவும் சேதமடைந்து தற்போது மண் சாலையாக மாறியுள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக வயல்வெளிபோல் மாறி விடுவதால் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.