சிதலடைந்த படிகட்டுகள்

Update: 2022-08-19 11:06 GMT
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள சேமங்கி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்களின் நலன் கருதி பல ஆண்களுக்கு முன்பு புகழூர் வாய்க்காலில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டது. அங்கு சேமங்கி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சலவை தொழிலாளர்கள் புகழூர் வாய்க்காலுக்கு வந்து குளித்தும், அழுக்குத் துணிகளை துவைத்தும் சென்று வருகின்றனர். இந்நிலையில் புகழூர் வாய்க்காலில் குளிப்பதற்காக வரும் பொதுமக்கள் சிதலடைந்த படுக்கட்டுகளில் இறங்கும் போது நிலை தடுமாறி வாய்க்காலுக்குள் விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்