கரூர் மாவட்டம், நொய்யல் பகுதியில் கடந்த சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. இந்த துணை சுகாதார நிலையத்திற்கு ஒரு செவிலியரை நியமனம் செய்யப்பட்டு அந்த செவிலியர் அங்கேயே தங்கி இருந்து சுகாதார நிலையத்திற்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்து மாத்திரைகளை வழங்கி வந்தார். இந்நிலையில் சுகாதார நிலையம் கட்டப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் சுகாதார நிலையம் பழுதடைந்தது .இதன் காரணமாக சுகாதார நிலையத்தில் இருந்த அனைத்து பொருட்களையும் எடுத்து மாற்று இடத்தில் வைத்து விட்டனர். இந்நிலையில் சுகாதார நிலையம் மிகவும் பழுது அடைந்துள்ளதால் எந்த நேரத்திலும் விழுந்து விபத்து ஏற்படும் நிலையில் இருந்ததன் காரணமாக சுகாதார நிலையத்தை பயனற்றதாக ஆக்கிவிட்டனர். இதனால் நொய்யல் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான நோயாளிகள் சுமார் 6 கிலோ மீட்டருக்கு மேல் உள்ள வேலாயுதம்பாளையம் பகுதிக்கும், ஓலப்பாளையம் பகுதிக்கும் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே இதுகுறித்து சுகாதாரத்துறை மேல் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.