டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை

Update: 2022-08-19 10:54 GMT
கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புகழூர் நான்கு ரோடு, தோட்டக்குறிச்சி வழியாக தளவாப்பாளையம் செல்லும் தார் சாலை ஓரத்தில் அய்யம்பாளையம் பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அரசு டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது. தார் சாலை ஓரத்தில் டாஸ்மார்க் கடை இருப்பதால் ஏராளமான மதுப்பிரியர்கள் மது பாட்டில்களை வாங்கி தார் சாலை ஓரத்தில் அமர்ந்து மதுவை அருந்திவிட்டு அவர்கள் கொண்டுவந்துள்ள உணவுப் பொருட்களை சாப்பிட்டு விட்டு பாட்டில்களை அங்கே உடைத்து போட்டுவிட்டு மது போதையில் அங்கேயே இருக்கின்றனர். இதனால் மாலை நேரங்களில் பெண்கள் இந்த வழியாக செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தேவையற்ற முறையில் மது போதையில் அந்த வழியாக செல்பவர்களை நிறுத்தி தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்