சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்பு

Update: 2022-08-19 10:53 GMT

திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி வேலைகள் 80 சதவீதம் நிறைவடைந்து விட்டது. மீதமுள்ள பணிகள் வேகமாக நடந்து வருகிறது. ஆனாலும் பணிகள் முடிந்த ஒரு சில சாலைகள் ஆக்கிரமிப்புகளால் ெபாதுமக்கள் அவதிப்படுகிறார்கள். நடராஜா தியேட்டர் பகுதியில் சாலையின் முன்பு இருசக்கர வாகனங்கள் விற்பனைக்காக சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்