தெருவிளக்கு அமைக்க வேண்டும்

Update: 2022-08-19 10:48 GMT

திருப்பூர் பூண்டி ரிங்ரோட்டில் செட்டிபாளையம் சந்திப்பு முதல் திருமுருகன்பூண்டி செல்லும் ரோட்டில் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறமும் தெருவிளக்குகள் இல்லை.

இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இருள் சூழ்ந்த பகுதியை பயன்படுத்தி சில சமூக விரோத செயல்களும், குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. எனவே பூண்டி-பூலுவப்பட்டி சாலையில் உடனடியாக தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்