நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியை சேர்ந்த வியாபாரிகள் சிலர் பொருட்களை வாங்கி கொண்டு சரக்கு வாகனத்தில் மலைப்பகுதியில் செல்லும்போது ஆட்களை பொருட்களின் மீது அமர வைத்து ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். இவ்வாறு செல்லும்போது தவறி விழுந்து உயிர்ப்பலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கொல்லிமலை சாலையில் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்ல தடை விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மனோகரன், காரவள்ளி, நாமக்கல்.