விழுப்புரம் காமராஜ் அரசு ஆண்கள் பள்ளியில் மாணவர்களுக்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கழிப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் அந்த கட்டிடம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் அதனை மாணவர்கள் பயன்படுத்த முடியாமல் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மாணவர்கள் நலன் கருதி பூட்டிக் கிடக்கும் கழிப்பறை கட்டிடத்தை உடனே திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.