கோவை சுங்கம் பகுதியில் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் இருந்து ரூபா நகர் செல்லும் வழியில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. அவை இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளை துரத்தி கடிக்க முயல்வதால், அந்த வழியாக செல்லவே அச்சப்படுகிறார்கள். மேலும் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.