தர்மபுரி நகரில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு ஏரிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் தர்மபுரி அடுத்த தோக்கம்பட்டியில் உள்ள ஏரி மழைநீர் தேங்காமல் வறண்டு காணப்படுகிறது. இந்த ஏரியின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கால்வாய்களை சிலர் ஆக்கிரமித்தும், தூர்வாராமலும் இருக்கிறது. எனவே அந்த ஏரியில் மழைநீர் தேங்குவதற்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாய்களை தூர்வார உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.