குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் சிரமம்

Update: 2022-08-18 12:40 GMT
நாகை மாவட்டம் நாகூரில் குரங்கு தொல்லைகள் அதிகமாக காணப்படுகிறது. இந்த குரங்குகள் வீடுகளின் உள்ளே புகுந்து சாப்பாட்டை தின்று விட்டு செல்கிறது. மேலும் பாத்திரங்கள் அனைத்தையும் தூக்கி வீசிவிடுகிறது. மேலும் வீடுகளில் மாடியில் உள்ள குடிநீர் தொட்டிகள்,துணிகள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்துகின்றனர். மேலும் சிறுவர், சிறுமிகளை கடித்து விடுகின்றன. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்