பாதியில் நிற்கும் களம் அமைக்கும் பணி

Update: 2022-08-18 12:34 GMT
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே முத்தனூரில் அப்பகுதி விவசாயிகளின் நலன் கருதி தரைக்களம் கட்டப்பட்டது. அதை விவசாயிகள் தங்களது விலை பொருட்களை கொண்டு வந்து காயவைத்து எடுத்துச்செல்கின்றனர். அதேபோல் பொதுமக்கள் தங்கள் வீட்டில் உள்ள தானியங்களை காய வைத்து எடுத்துச்சென்று பயன்படுத்தி வந்தனர். மழை காலங்களில் தரைக்களத்தில் இருக்கும் விவசாய பொருட்கள் மீது மழைநீர் சென்று தேங்கி நிற்பதால் அந்த களத்தை அகற்றிவிட்டு உயரமான விவசாயக்களம் அமைத்து தர விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் காரணமாக பழைய காலத்தை எடுத்து விட்டு புதிதாக உயரமாக களம் அமைக்கும் பணி தொடங்கியது. ஆனால் களம் அமைக்கும் பணி முழுமை பெறாமல் பாதியிலேயே கடந்த 4 ஆண்டுகளாக இருக்கிறது. இதனால் அரசு பணம் வீணாகி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்