விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அரசுசாட்சியாபுரத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு தினமும் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்வர். இந்த நிலையில் அலுவலக மேற்கூரை மற்றும் கட்டிடம் பழுதடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலுவலகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.