விருதுநகர் அருகே பி.குமாரலிங்கபுரம் என்ற வள்ளியூரில் உள்ள பயணிகள் நிழற்குடையின் தரைத்தளம் சேதமடைந்து உள்ளது. இதனால் பயணிகள் வெயிலிலும், மழையிலிலும் பஸ்சிற்காக காத்திருக்கும்போது அவதிப்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.