கழிவு நீர் கால்வாயில் ஆக்கிரமிப்பு

Update: 2022-08-18 12:20 GMT

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா இ.ரெட்டியபட்டி அருகே சோலைபட்டி கிராமத்தின் மேல தெருவில் கழிவுநீர் கால்வாயை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் கழிவுநீரானது நிரம்பி சாலைகளில் வழிந்தோடுகிறது. மேலும் இப்பகுதியில் உள்ள பொது கிணறும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாதவாறு ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்