தர்மபுரி பழைய கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்கள் பயன்படுத்தி வந்த அலுவலகக் கட்டிடம் கடந்த சில ஆண்டுகளாக உரிய பயன்பாடு இன்றி சேதமடைந்து காணப்படுகிறது. இந்த கட்டிடம் முறையான பராமரிப்பு இல்லாததால் செடி, கொடிகள் வளர்ந்து பழுதடைந்து வருகிறது. எனவே இந்த கட்டிடத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.