கரூர் நரசிம்மபுரம் தெற்கு சாலையின் ஓரத்தில் உள்ள ஒரு பாதாள சாக்கடை மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள் கீழே விழுந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் சிலர் அந்த பாதாள சாக்கடையை கவனிக்காமல் கீழே விழும் நிலையும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடைக்கு மூடி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.