கரூர் மாவட்டம் நன்செய் புகழூர் ஊராட்சி தவிட்டுப்பாளையத்தில் பொது மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தேக்கத்தொட்டி அருகில் பலர் வந்து அமர்ந்து மது அருந்திவிட்டு மது பாட்டில் அங்கேயே போட்டு உடைத்து விட்டு மது போதையில் மலம் கழிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இது தெரிந்தும் எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஈவேரா.மண்டபத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் வழியில் உள்ள மின் கம்பத்தில் மின் விளக்குகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக எரியவில்லை. இது குறித்து மின்வாரிய அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கும் எடுக்கவில்லை. இதனால் இது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. நன்செய் புகளூர் ஊராட்சி நிர்வாகம் மது அருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.