நாய்கள் தொல்லை

Update: 2022-08-17 15:10 GMT


தஞ்சாவூர் மாவட்டம்,கும்பகோணம் மாநகரம் பழவத்தான்கட்டளை கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட காரைக்கால் சாலை,விவேகானந்தா நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாகச் சுற்றித் திரிகின்றன.அவைகள் பள்ளிக்குச் செல்லும் மாணவ -மாணவிகளையும் தெருக்களில் விளையாடும் சிறுவர்களையும் விரட்டிச் சென்று கடிக்கின்றன. நாய்கள் சாலையில் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கும்பகோணம், பொதுமக்கள்.

மேலும் செய்திகள்