திருச்சி மாநகராட்சி 54-வார்டு கள்ளர்தெருவில் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் அருகே சாக்கடைகள் செல்வதற்காக தரைப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலத்தின் மேல்பகுதியில் சிமெண்டு பூச்சுகள் உடைந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் பள்ளி மாணவ-மாணவிகள் தெரியாமல் அதில் விழுந்தால் காயம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.