மயிலாடுதுறை பட்டமங்களம் ஊராட்சி கம்பர் தெருவில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. குறிப்பாக மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதன் காரணமாக மின்கம்பம் வலுவிழந்து காணப்படுகிறது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மின்கம்பம் உள்ள பகுதியை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், பட்டமங்களம்.