விருத்தாசலம் அடுத்த எம்.பட்டி கிராமம் எம்.பரூர் செல்லும் சாலையில் விருதகிரி ஏரி அமைந்துள்ளது. பல ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த இந்த ஏரியை சுற்றிலும் தனி நபர்கள் ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ளனர். இதனால் ஏரியின் பரப்பளவு நாளுக்கு நாள் சுருங்கி வருவதால் ஏரியில் தண்ணீர் பிடிக்கும் கொள்ளளவு குறைந்து வருகிறது. நீர்நிலை ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், இந்த ஏரியை அதிகாரிகள் ஏனோ கண்டும், காணாமலும் சென்று விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுத்து இந்த ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.