பெரம்பலூர் மாவட்டம், கொளக்காநத்தம் கிராமத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக குறுநில அளவையர் அலுவலகம் கட்டப்பட்டு இன்று வரை திறக்கப்படவில்லை. இதனால் தற்போது அந்த கட்டிடம் சிதலமடைந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.