தென்காசி மாவட்டம் புளியங்குடி டி.என்.புதுக்குடியில் பள்ளிவாசல் பஸ்நிறுத்தம் தென்புறம் காமராஜர் சிலை எதிரே பயணிகள் நிழற்கூடம் உள்ளது. வெயிலுக்கு பயணிகள் நிழற்குடைக்குள் செல்ல முடியாதபடி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு குப்பைக்கூளங்களும் கிடக்கின்றன. எனவே நிழற்கூடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.